தொல்காப்பியம்–எழுத்ததிகாரமும் நூன்மரபும் மொழி மரபும் மாணிக்கவுரை

நூலாசிரியர்: பேரா. முனைவர் வ.சுப. மாணிக்கம்
வெளியீட்டு எண்: 120, 1989, ISBN: 81-7090-143-x
டெம்மி1/8, பக்கம் 212, உரூ. 22.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மாணிக்கவுரையாக அமைந்துள்ள இந்நூலில், இயல் முன்னுரை என்பது இயல்தோறும் வரும் இலக்கணக் கருத்துக்களின் சிறப்புக்கள் புலப்படுத்தப்பெறுகின்றன. இன்றும் மக்கள் நடைமுறையில் இருக்கும் வழக்குகளோடு பொருத்திக் காட்டப்பெறுகின்றன. இயற்கருத்து என்பதில் நூற்பாக்களின் கருத்துக்கள் முதற்கண் சுருக்கமாகத் தொகுத்துக் கூறப்பெறுகின்றன. அடுத்து அகலவுரை அமைகின்றது. வழக்குக் குறித்து ஆராய்ந்த பிறகு திறனுரை அமைகிறது. இதில் நூற்பாவின் பொருள், அமைப்பு, நடை, சொல்லாட்சி, காட்டுக்கள் என நூற்பாவின் பெருவிளக்கம் அமைகிறது. இறுதியில் இயல் முடிவுரை அமைகின்றது.

தொல்காப்பிய ஆய்வுக்கு இந்நூல் அருந்துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்