சோழ மண்டல சதகம்

பதிப்பாசிரியர்: புலவர் செ. இராசு
வெளியீட்டு எண்: 190அ, 1994, ISBN:81-7090-238-x
டெம்மி1/8, பக்கம் 112, உரூ. 40.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு:60.00
சாதாக்கட்டு

சோழநாட்டின் பல்வேறு வரலாற்றுச் செய்திகளச் செறிவாகக் கொண்டு விளங்கும் சோழ மண்டல சதகத்தின் மறுபதிப்பைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.

இந்நூலில், சோழ நாட்டின் பல்வேறு பெருமைகள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. சோழநாடு, சோழ அரசர், அவர்தம் வீரம், ஆட்சிச்சிறப்பு, நாட்டு எல்லை, நிலவளம், நீர்வளம், காவிரி, வேளாண்மை, உழவர்கள், தலங்கள், திருப்பணி, மக்கள், தலைவர்கள், வள்ளல்கள், சமயப்பெருமை, சமயத்தலைவர்கள், புலவர்கள் போன்ற பல சிறப்புச் செய்திகளை இந்நூல் தொகுத்துக் கூறுகிறது.

கி.பி. 1723ஆம் ஆண்டு சோழநாட்டு வேளூர் ஆத்மநாத தேசிகர் என்னும் புலவரால் இந்நூல் பாடப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்