நவீன கவிதை

பதிப்பாசிரியர்: முனைவர் து. சீனிச்சாமி
வெளியீட்டு எண்: 287, 2005, ISBN:81-7090-348-3
டெம்மி1/8, பக்கம் 322, உரூ. 110.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஓராண்டு நிறைவை ஒட்டி நிகழ்ந்த சிறப்புக் கருத்தரங்கில் (15,16,-09-1982) படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இவ்வரிய நூல்.

கவிதை சார்ந்த பொருண்மைகள் நான்கு பகுதிகளாக அமைக்கப்பெற்று ஆராயப்பெற்றுள்ளன. அவை: 1. பாடுமுன் பெற்ற அனுபவம், 2. தற்காலக் கவிதையின் இயல்பும் உள்ளோட்டமும், 3. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கவிதை, 4. கவிதைத் தேர்வின் அடிப்படை என்பன.

முதற்பகுதி கவிஞர்கள் தங்களுக்குக்கிடைத்த உள்ளெழுச்சி பற்றியது. ஐந்து கவிஞர்கள் இது குறித்து எழுதியுள்ளனர். அடுத்த பகுதிகள் இரண்டும் கவிதைத் திறனாய்வு சார்ந்தவை. மூன்றாம் பகுதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கவிதையின் போக்கு எப்படியிருக்கும் என்பது பற்றிய கணிப்புகளாக அமைவது. இறுதிப்பகுதியில், இன்றையப் போக்குகளுக்கும் தமிழ்க் கவிதையின் உள்ளோட்டங்களுக்கும் ஏற்ப சிறந்த கவிதைகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றி ஆராயப்பெற்றுள்ளது. இவ்வாய்வு பற்றிய கலந்துரையால்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்