சமுதாயத் தத்துவம்

நூலாசிரியர்: முனைவர் க.பாஸ்கரன்
வெளியீட்டு எண்: 184, 1994, ISBN:81-7090-232-0
டெம்மி1/8, பக்கம் 108, உரூ. 30.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சமுதாயத்தின் உண்மையான அடித்தளங்களைக் கண்டுபிடித்தல் என்பது சமுதாயத் தத்துவத்தின் நோக்கமாக உள்ளது. சமுதாயத் தத்துவம் என்பது தனித்ததொரு இயலாக வளர்ந்து வருகின்றது. மேலைநாட்டுத் தத்துவங்களில் இப்போக்கு அதிகளவில் காணப்பெறுகின்றது. இத்தகைய மேலைநாட்டுத் தத்துவங்களில் காணப்பெறும் தத்துவக்கூறுகள் இந்நூலில் விளக்கப்பெறுகின்றன.

இந்நூலில், மனித இயல்பு, சமுதாயம், தனிமனிதனும் சமுதாயமும், குடும்பம், அரசு, சமுதாயமும் பண்பாடும், சமுதாயமும் சமயமும் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான விளக்கங்களை எளிய முறையில் எடுத்துரைத்துள்ளார்.

சமூக ஆய்வுகளுக்கு அடிப்படை நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்