இசைத்தமிழ் வரலாறு (முதற்பகுதி)

நூலாசிரியர்: பேரா து. ஆ. தனபாண்டியன்
வெளியீட்டு எண்: 186, 1994, ISBN:81-7090-234-7
டெம்மி1/8, பக்கம் 428, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தொல்காப்பியக் காலம் முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் நிகழ்ந்த இசைத்தமிழ் வரலாற்றை ஆராயும் நூல். இசையின் தோற்றம், சிறப்புகள், தொன்மை, பாணர்கள் இசையைப் போற்றியமை, இசை இலக்கணம் கூறும் நூல்கள், இசையும் கூத்தும், பண், தாளம், யாழ், குழல், தாளக்கருவிகள் போன்ற பல செய்திகள் இந்நூலில் விளக்கப்பெறுகின்றன.

தமிழ் நீதி நூல்கள், காப்பியம், சிந்தாமணி ஆகியவற்றில் இடம்பெறும் இசை பற்றிய குறிப்புகள், பல்லவர்கள் கலைகளைப் போற்றியமை, ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், சோழ மன்னர்களின் பங்களிப்பு, திருவிசைப்பாவின் இசைச்சிறப்பு, சேக்கிழார் தரும் இசைச் செய்திகள், இசைக் கலைச்சொற்கள் போன்றன இந்நூலில் இடம் பெறுகின்றன.

இசைத்துறை ஆய்வுகளுக்குப் பயனளிக்கும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்