சேதுபதி செப்பேடுகள்

பதிப்பாசிரியர்: புலவர் செ. இராசு
வெளியீட்டு எண்: 172, 1994, ISBN:81-7090-220-9
கிரவுன்1/4, பக்கம் 626, உரூ. 200.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

இந்நூலில், 107 செப்பேடுகள் தொகுத்தளிக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு செப்பேடும் இருக்கும் இடம், அரசர், காலம், அளவு போன்ற செய்திகள் முறையாக எழுதியளிக்கப்பெற்றுள்ளன. பதிப்பாசிரியர் தம் பதிப்புரையில் சேதுபதிகளின் வரலாற்றை விரிவாக ஆய்ந்து விளக்கியுள்ளார்.

இச்செப்பேடுகளின் மூலம் சேதுபதிகள் காலச் சமயம், சமயத் தலைவர்கள், சமூகம், வணிகம், பொருளாதார நிலை, வேளாண்மை, பிறதொழில்கள், குற்றங்கள், தண்டனை, நாணயமுறை, அளவுமுறை, நீர்நிலைகள், முத்துக்குளித்தல், நாட்டுப்பிரிவுகள், அரசு அலுவர்கள், சேதுபதிகள் குடும்பம், திருமண உறவுகள், காடழித்து நாடாக்குதல் போன்ற பல்வேறு செய்திகளை நன்கு அறிகின்றோம்.

செய்திகளும் நிகழ்வுகளும்