அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை

நோக்கம்

அறிவியல் துறைகளில் தமிழ்வளர்ச்சி என்னும் ஆய்வுப் பணியையும் தமிழ்வழி அறிவியல் பரப்புதல் என்னும் சமுதாய விரிவாக்கப் பணியையும் இரு நோக்கங்களாகக் கொண்டு இத்துறை செயற்பட்டு வருகின்றது.

ஆய்வுப் பணிகள்

தமிழ்வழி பொறியியல், மருத்துவப் பட்டப்படிப்பிற்கான பாடநூல்களை உருவாக்குதல், அறிவியல் கூறுகளை வெளிக்கொணருதல், தமிழில் அறிவியல் உரைக்கட்டு, அறிவியல் பாடமாக்கம் முதலியவற்றை ஆராய்தல், ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய ஆய்வுப் பணிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது.

கல்விப்பணிகள்

  • ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்)
  • முனைவர் பட்டம் (பி.எச்.டி)

ஆகிய இரண்டு ஆய்வுப் பட்டப்படிப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து அறிவியல் தமிழ் சார்ந்த ஆய்வுகள் செய்து பட்டங்கள் பெற்று வருகின்றனர்.

ஆசிரியர்கள்

WhatsApp Image 2023-04-16 at 08.51.02

முனைவர் சி. தியாகராஜன்

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

ProfIndhuMam

முனைவர் இரா. இந்து

இணைப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்