அகராதியியல் துறை

நோக்கம்

கலைக்களஞ்சியங்கள், சொற்றொகுதிகள், சொல்லடைவுகள், ஒருமொழி, இருமொழி அகராதிகள் போன்ற பல்வேறு நோக்கு நூல்களைப் படைத்து அளித்தல். தமிழ் மொழியில் அகராதியியல் வளர்ச்சியைச் சிறப்பு பொது நிலைகளில் உலக மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்தல், பல்வேறு அரிய அகராதிகளையும் நிகண்டுகளையும் திரட்டி ஆவணப்படுத்துதல், தமிழ் அகராதியியல் தொகுப்பியல் குறித்து ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளுதல், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அகராதியல் பயிற்சி அளித்தல், அகராதித் தொகுப்பில் ஆர்வம் உடையவருக்கு ஊக்கம் அளித்து நெறிப்படுத்துதல், இதுவரை வந்துள்ள அகராதிகளைச் சீரமைத்தல் (புதிதாக இணைத்தல் முதலியன), ஒலிப்பு அகராதி, அகராதிப் பயிற்சி நூற்கையேடு உருவாக்குதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அகராதிப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இத்துறையின் நோக்கங்களாகும்.

ஆராய்ச்சிப் படிப்புகள்

  • ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்)
  • முனைவர் பட்டம் (பி.எச்,டி)

முதுகலை வகுப்புகள்

பயன்பாட்டுத் தமிழியல் (எம்.ஏ)
வளர்தமிழ்ப் புலத்தின் சார்பில் அகராதியியல் துறையில் முதுகலை தமிழ் (பயன்பாட்டுத்தமிழியியல்) வகுப்புகள் 2003 முதல் நடைபெற்று வருகின்றன. அகராதியியல் பட்டய வகுப்பும் ஓராண்டு பகுதிநேரப்படிப்பாக உள்ளது.

ஆசிரியர்கள்


முனைவர் செ.த.ஜாக்குலின்
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்(பொ)

 Dr.veeramani
முனைவர் சி.வீரமணி
இணைப்பேராசிரியர்

Dr.shemasundari
முனைவர் சி.சேமசுந்தரி

உதவிப் பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்