இசைத்துறை

நோக்கம்

இந்திய இசை வளர்ச்சியில் இடம் பெற்றுள்ள தமிழரின் தொடர்ச்சியான பங்களிப்பினையும் தமிழரின் தனித்துவம் மிக்க இசைக் கூறுகளையும், வரலாற்று நோக்கில் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அவற்றை நூல்கள் கட்டுரைகள் வாயிலாக வெளியிடுவது. மரபிசைப் பாடல்களைப் பாதுகாத்துத் தற்கால இசையுடன் இவற்றைப் பொருத்தித் தற்காலத் தமிழிசை மேம்பாட்டிற்கு வளம் சேர்க்கும் பணிகளைச் செயல்படுத்துவது. இளைய தலைமுறையினரிடையே இசைப்போட்டி நடத்தித் தரமான தமிழிசைப் பாடல்களைப் பரப்புவது. இசை உயர் ஆய்வுப் பட்டங்களை மேற்கொள்ள மாணவர்களை நெறிப்படுத்துதல் இசைத்துறை சார்ந்த பட்ட மேற்படிப்பு (முதுகலை) மற்றும் சான்றிதழ் வகுப்புகளைச் செயல்படுத்தித் தமிழிசையைப் பரவலாக்குதல்.

ஆய்வுப் பணிகள்

தமிழிசை குறித்தும் தமிழ்ப் பாடல்கள் குறித்தும் வரலாற்று நோக்கிலும், பகுப்பாய்வாகவும், ஒப்பாய்வாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஆய்வு மேற்கொண்டு நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடுதல், பரிபாடல், புறநானூறு, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலுள்ள இசைப் பாடல்களை இனங்கண்டு அவற்றிற்கு இசையமைத்துச் சுரதாளக் குறியீடுகள் அமைத்தல், தமிழிசை சார்ந்த கலைச்சொற்களை உருவாக்குதல். ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களின் ஆய்வுகளை நெறிப்படுத்துதல், தமிழிசை தொடர்பான கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரைகள் வழங்குதல், இசையுடன் கூடிய சொற்பொழிவுகள் ஆற்றுதல்.

முதுகலை, சான்றிதழ் (வீணை, வாய்ப்பாட்டு) வகுப்புகள் எடுத்தல், கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி வகுப்புகளை நடத்துதல், துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு இசை நாட்டியம் தொடர்பான அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல், இசைப் போட்டிகள் நடத்தி அரிய தமிழ்ப் பாடல்களை வெளிக் கொணருவது. தமிழ்ப் பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சிகளைப் பல்வேறு இடங்களில் நடத்துவதற்கேற்ற வகையில் துறை மாணவர்கள் ஆசிரியர்கள் கொண்ட கலைக்குழு ஒன்றினை ஏற்படுத்துதல்.

ஆசிரியர்கள்

madhavi
முனைவர் இரா.மாதவி
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

karpagam
முனைவர் செ.கற்பகம்
இணைப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்