கணிப்பொறி அறிவியல் துறை

நோக்கம்

அறிவியல் துறை ஆய்வுப் பணிகளுக்குக் கணிபொறி பயன்படுவது போன்று மொழி ஆய்வுப் பணிகளுக்கும் அதன் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாகும். இந்நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி வழி சில மொழி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வினைத் தரப்படுத்துதல், துல்லியப்படுத்துதல், வேகப்படுத்துதல், நேரம் மிச்சமாக்கல் மற்றும் உடல் உழைப்பைக் குறைத்தல் போன்ற பல நிலைகளில் கணிப்பொறி பயன்படுவதை உணர்த்தி கணிப்பொறி ஓர் மொழியாய்வுக் கருவி என்னும் கோட்பாட்டை நிறுவி வருகிறது. மொழி ஆய்வுப்பணிகளுக்குக் கணிப்பொறி பயன்படும் விதத்தைச் செயல்முறையாகவும், நூல்கள் மூலமாகவும், பயிற்சி வகுப்புகள் மூலமாகவும், ஏனைய பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள ஒரு தூண்டு கோலாகக் கணிப்பொறி துறை விளங்குகிறது. கணிப்பொறி வழி மொழி ஆய்வுளை மேற்கொள்ளுதல், ஆசிரியர் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் மூலம் கணிப்பொறித் தமிழ்க் களம் அமைப்பதில் கணிப்பொறித் துறை பங்களித்து வருகிறது.

பணிகள்

கணிப்பொறி அறிவியல் துறையில் கணிப்பொறி வழி மொழிபெயர்ப்பு, கணிப்பொறி வழி ஊர்நிலைச் செய்திகள் ஆய்வு, செய்தித்தாள் மொழிநடை ஆய்வு, இந்திய மொழி வரிவடிவ மாற்ற அமைப்பு, சங்க இலக்கிய அகராதி, அனைத்துலக ஓலைச்சுவடிகள் அட்டவணை மற்றும் கணிப்பொறி வழி திருக்குறள் ஆய்வு போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்குப் புத்தொளிப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மைய அரசின் மின்னணுத் துறையின் நல்கை பெற்ற இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing – NLP) என்ற கணிப்பொறிப் பயிற்சி திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தேசிய அளவில் 150 மொழியாசிரியர்கள் ஆய்வாளர்கள் பயிற்சி பெற்றனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த மைய அரசின் மின்னணுத்துறை தேசிய அளவில் தெரிவு செய்த ஐந்து மையங்களுள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பொறித்துறையும் ஒன்றாகும். சுயநிதித் திட்டத்தின்கீழ் பங்கேற்பாளர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணம் வசூலித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் புதிய உலகில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்குக் கணிப்பொறி அறிவு அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்குக் கணிப்பொறிப் பயிற்சி தரப்படுகிறது. 2001-2002 கல்வியாண்டில் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறை, இலக்கியத்துறை, அகராதியியல் துறை மற்றும் இசைத்துறை ஆகிய துறைகளில் தொடங்கப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கணிப்பொறி திறனறிதல் மற்றும் கணிப்பொறி வழி மொழி ஆய்வு போன்ற புதிய பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கணிப்பொறித் தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பு

மொழி ஆய்வுப் பணிகளுக்குக் கணிப்பொறியைப் பயன்படுத்தத் தேவையான மென்பொருள்களை உருவாக்க மொழியளார்கள் மற்றும் கணிப்பொறி வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டு முயற்சி அவசியமாகும். இத்தகைய மென்பொருள்களில் மொழி அறிஞர்களின் ஆய்வுத்திறன் பொதியப்படவேண்டும். மொழியாளர்கள் கணிப்பொறி வல்லுநர்களுடன் இணைந்து சிந்திக்கலாம். செயல்படவும் வேண்டும். கணிப்பொறியாளர்களும் மொழியாளர்களும் இணைந்து செயல்படக்கூடிய திட்டப்பணிகளில் மொழி நடை ஆய்வு (Stylistic), ஆசிரியர் பெயர் தெரியாத படைப்புகளுக்கும் மொழி நடையை ஒப்புநோக்கி ஆசிரியர் பெயர் கண்டறிதல் (Autoship Identification), இலக்கண அமைப்பு அடிப்படையில் இயந்திர மொழி பெயர்ப்பு மற்றும் கணிப்பொறி வழி மொழி கற்றல், கற்பித்தல் போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். இப்பணிகளை மேற்கொள்ள கணிப்பொறித்துறை சில திட்டங்களைக் கருதியுள்ளது.

பாடப்பிரிவுகள்

  • முது அறிவியல் (கணிப்பொறி அறிவியல்)
  • ஆய்வியல் நிறைஞர் (கணிப்பொறி அறிவியல்)
  • முனைவர் பட்டம் (கணிப்பொறி அறிவியல்)
  • பட்டயம் (கணிப்பொறி அறிவியல்)

neelakantan
முனைவர் ரெ.நீலகண்டன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்(பொ)

ravikumar

முனைவர் கா.இரவிக்குமார்

இணைப்பேராசிரியர்

 

senthilkumar

முனைவர்.அ.செந்தில் குமார்

உதவிப்பேராசிரியர்

 

செய்திகளும் நிகழ்வுகளும்