தமிழ் மின்சொற்களஞ்சியம்

நூலாசிரியர்கள்: முனைவர். எஸ். இராசேந்திரன், திரு. ச. பாஸ்கரன்
வெளியீட்டு எண்: 315, 2006, ISBN:81-7090-376-9
டெம்மி1/8, பக்கம் 181, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மின்சொற்களஞ்சிய உருவாக்கத்தின் பரந்த நோக்கங்களையும், அது எந்த அலவுக்கு அதன் முதல் நிலையில் நிறைவேற்றப் பட்டுள்ளன என்பது குறித்தும், தற்போதைய நிலையில் இக்களஞ்சியத்தைப் பயன்படுத்திப் பெற இயலும் செய்திகள் குறித்தும் இந்நூலில் முதலில் அறிமுகப் படுத்தப்பெறுகின்றன.

கணினி சொற்பொருண்மையியல் என்ற இரண்டாவது பகுதியில், எதிர்காலத்தில் கணினி சொற்களஞ்சியத்தில் சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் மற்றும் அதன் அமைப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கத் தேவையானவை கூறப்பட்டுள்ளன.

பொருட்புலப்பாகுபாடு என்ற பகுதியில், பல்வேறுபட்ட சொற்களஞ்சிய வகைப்பாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இத்தகைய சொல் மற்றும் பொருண்மை உறவுகள் பற்றி அடுத்து விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் மின்சொற்களஞ்சியத்தின் முதல்நிலை பற்றி விளக்கும் நூலாசிரியர்கள் இரண்டாவது நிலையில் எவ்வகை முன்னேற்றம் செய்யப்படும் என்ற தம் எதிர்காலத் திட்டத்தையும் விளக்கியுள்ளனர்.

News & Events