மர இனப்பெயர்த் தொகுதி – 1

தொகுப்பாசிரியர்கள்: முனைவர்.பெ. மாதையன்,
முனைவர். எச். சித்திரபுத்திரன்
வெளியீட்டு எண்:40, 1986, ISBN: 81-7090-100
டெம்மி 1/4, பக்கம் 560, உரூ. 200.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழ் நிகண்டுகள், மருத்துவ அகராதிகள், தமிழ்ப்பேரகராதி போன்ற பல்வேறு நோக்கு நூல்களில் இடம் பெற்றுள்ள மர இனப்பெயர்களை ஒன்றாகத் திரட்டி அவற்றை முறைப்படுத்திப் பதிப்பித்து ஒருபொருள் பலசொல் அகராதியாகப் படைக்கப்பட்டுள்ளது இம்முதல் தொகுதி.

இம்முதல் தொகுதியில், ‘அக்கபாரி’ முதல் ‘கௌளிபாத்திரம்’ வரையான தலைச்சொற்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இத்தொகுதி அகராதிப் பகுதி, தாவிரவியற் பெயர்ப்பகுதி, குறுக்கு நோக்கீட்டுப் பகுதி என மூன்று பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தும் சொற்களை இதில் காணலாம். தமிழகத்தில் உள்ள மர இனப்பெயர்களின் விரிவை அறிய இது துணைபுரியும்.

News & Events