வயது வந்தோர் கல்வியியல் கலைச்சொல் விளக்க அகராதி

நூலாசிரியர்: முனைவர். செ சுப்பிரமணியன்
வெளியீட்டு எண்: 361, 2010, ISBN:978-81-7090-404-5
டெம்மி1/8, பக்கம் 73, உரூ. 40.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சமூக அறிவியல் பாடங்களில் ஒன்றான வயது வந்தோர் கல்வியியல் (Adult Education) பாடச் சொற்களைத் தொகுத்துத் தமிழ்ப் பல்கலைக்கழக மூன்று திங்கள் ஆய்வுத் திட்டத்தின் கீழ் இவ்வகராதி உருவாக்கப்பட்டுள்ளது. ஐ. நா. சபையின் ஓர் உறுப்பான யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள Terminology of Adult Education என்ற ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ள 312 சொற்களும் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தக்க விள்ளங்களுடன் கூடியதாக இவ்வகராதி தொகுக்கப்பட்டுள்ளது.

இவ்வகராதியின் கலைச்சொல் பதிவமைப்பில், முதற்பகுதியில் ஆங்கிலக் கலைச்சொல்லும், இரண்டாம் பகுதியில் ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லும், மூன்றாம் பகுதியில் கலைச்சொல்லிற்கான விளக்கம் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

News & Events