சமுதாயப்பார்வையில் திருமங்கையாழ்வார் சுட்டும் இறைத் தத்துவம்

நூலாசிரியர்: முனைவர். ஜெ. அரங்கசாமி
வெளியீட்டு எண்: 209, 2000, ISBN:81-7090-269-x
டெம்மி1/8, பக்கம் 106 உரூ. 40.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பெரிய திருமொழியில் 90 பாடல்களை மட்டும் ஆசிரியர் தம் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்து, அதன் வழி திருமங்கையாழ்வாரது பக்தியின் திறத்தையும் விளக்கியுள்ளார். அதனால் பெறப்படும் உண்மைகள் சமுதாய மக்கள் இன்பமாய் வாழ எவ்வழிகளில் பயனுடையதாக அமைகின்றன என்பதை விவரிப்பதாக இந்நூலை ஆசிரியர் அமைத்துள்ளார்.

இறைவனுடைய இலக்கணங்கள், இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, இறைவனுடைய அவதார நோக்கம், திருமங்கையாழ்வாரும் பூசைத்திருமேனியும் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பல செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.

ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுக்குத் துணையாகும் அரிய நூலாக இந்நூல் திகழ்கிறது.

News & Events